காசா அமைதி ஒப்பந்தத்தின்படி 7 இஸ்ரேலிய பணயக்கைதிகள் ஹமாஸினால் விடுவிப்பு

Benjamin Netanyahu Donald Trump Israel Israel-Hamas War
By Faarika Faizal Oct 13, 2025 01:07 PM GMT
Faarika Faizal

Faarika Faizal

ஹமாஸினால் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள் 7 பேர் இஸ்ரேலுக்கு திரும்பி விட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான இரண்டு வருட போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் முதல் படியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக் கொள்ளும் செயல்முறை தொடர்பாக, முதலில் 7 பணயக் கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் அமைப்பு இன்று விடுவித்துள்ளது.

இஸ்ரேலிய சிறைகளில் நடக்கும் கொடுமைகளை விவரிக்கும் பலஸ்தீன பத்திரிகையாளர்

இஸ்ரேலிய சிறைகளில் நடக்கும் கொடுமைகளை விவரிக்கும் பலஸ்தீன பத்திரிகையாளர்

பலஸ்தீன கைதிகள்

அத்தோடு, ஹமாஸ் அமைப்பு உயிருள்ள 20 பணயக்கைதிகளையும் இறந்த 28 பணயக்கைதிகளின் உடல்களையும் விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

காசா அமைதி ஒப்பந்தத்தின்படி 7 இஸ்ரேலிய பணயக்கைதிகள் ஹமாஸினால் விடுவிப்பு | Israel Hamas War

இதற்கிடையில், இஸ்ரேலிய அமைச்சரவை 1,718 பலஸ்தீன கைதிகளை விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னர் அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கை 1,722 ஆக இருந்தது, ஆனால் சர்வதேச ஊடகங்கள் இப்போது விடுவிக்கப்படவுள்ள பலஸ்தீன கைதிகளின் எண்ணிக்கை 1,718 ஆக திருத்தப்பட்டுள்ளதாகக் கூறுகின்றன.

வெடிகுண்டுகளின் சத்தங்கள் இல்லாத காசா : மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள்

வெடிகுண்டுகளின் சத்தங்கள் இல்லாத காசா : மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள்

காசா போர் நிறுத்தம்; வீடுகளை நோக்கி படையெடுக்கும் பலஸ்தீனர்கள்

காசா போர் நிறுத்தம்; வீடுகளை நோக்கி படையெடுக்கும் பலஸ்தீனர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW