காசாவில் பணியாற்றிய ஊடகவியலாளர் ஸாலிஹ் அல் ஜபராவி படுகொலை

Palestine Israel-Hamas War Gaza
By Faarika Faizal Oct 13, 2025 05:42 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

காசா போர்க்களத்தில் இருந்து பணியாற்றிய ஊடகவியலாளர் ஸாலிஹ் அல் ஜபராவி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சில ஆயுதக் குழுக்கள் அவரைக் கடத்திச் சென்று, படுகொலை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக காசாவில் நடக்கும் இனப்படுகொலையை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டிய ஊடகவியலாளர்களில் ஒருவர் ஸாலிஹ் அல் ஜபராவி.

வெடிகுண்டுகளின் சத்தங்கள் இல்லாத காசா : மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள்

வெடிகுண்டுகளின் சத்தங்கள் இல்லாத காசா : மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள்

  

கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்   

இவர் காசாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு முதற்கட்ட போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில் அதனை வரவேற்கும் விதமாக தனது மகிழ்ச்சியை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த சம்பவம் காசா நகரின் சப்ரா பகுதியில் நடைபெற்றதாகவும் தெவிக்கப்படுகிறது.

காசாவில் பணியாற்றிய ஊடகவியலாளர் ஸாலிஹ் அல் ஜபராவி படுகொலை | Israel Hamas War 

அத்தோடு, காசாவில் போர்நிறுத்தம் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் இந்த கொடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து தற்பொழுது உலகளவில் பலரும் தங்கள் கவலையை வெளிப்படுத்தி வருவதுடன், அவருக்காக பிரார்த்தனைகளையும் செய்து வருகின்றனர். 

காசா போர் நிறுத்தம்; வீடுகளை நோக்கி படையெடுக்கும் பலஸ்தீனர்கள்

காசா போர் நிறுத்தம்; வீடுகளை நோக்கி படையெடுக்கும் பலஸ்தீனர்கள்

காசாவில் இஸ்ரேலிய படைகள் நிலைநிறுத்தப்படும்! நெதன்யாகு எச்சரிக்கை

காசாவில் இஸ்ரேலிய படைகள் நிலைநிறுத்தப்படும்! நெதன்யாகு எச்சரிக்கை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW