வெடிகுண்டுகளின் சத்தங்கள் இல்லாத காசா : மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள்
போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததையடுத்து, பலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளை நோக்கி திரும்பி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த யுத்தத்தின் காரணமாக காசாவில் இருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளை நோக்கி திரும்பி வருகின்றனர்.
அத்தோடு, யுத்தம் நிறுத்தப்பட்டது மற்றும் தங்கள் வீடுகளுக்கு சென்று இயல்பு வாழ்க்கை வாழவிருக்கும் காசா மக்கள் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள்
அந்தவகையில், இரண்டு ஆண்டுகளில் அனுபவிக்காத, இஸ்ரேலிய ட்ரோன்கள் மற்றும் வெடிப்பு சத்தங்கள் இல்லாத ஒருநாளை பலஸ்தீனியர்கள் காசாவில் அனுபவித்துள்ளனர்.
அதேவேளை, “இன்றிரவு காசாவில் மிதப்பது நம்பிக்கை மட்டுமே. ட்ரோன்கள் இல்லை. குண்டுகள் இல்லை. ஆரஞ்சு வானம் இல்லை. வெறும் அமைதி, இங்கே மிகவும் அரிதான ஒரு சத்தம், இது கிட்டத்தட்ட விசித்திரமாக உணர்கிறது, விமானத் தாக்குதல்கள் அல்லது அழிக்கப்பட்ட தெருக்களில் அம்புலன்ஸ்கள் ஓடாத மாதங்களில் இது முதல் இரவு என்றும் காசாவில் இருக்கக்கூடிய ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
“இன்று, ட்ரோன்கள் நின்றுவிட்டன, இனி எந்த சத்தமும் இல்லை. நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம், எங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் மகன்கள் மற்றும் மகள்களுடன் அமைதியாக கூடியிருக்கிறோம், அது நல்லது,” என்று காசா மக்களில் ஒருவர் தனது மனநிலையை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அமைதியான தருணம்
மேலும், தெற்கு காசாவில் நெரிசலான தற்காலிக முகாம்களில் இருந்த குடும்பங்கள் இறுதியாக ஒரு அமைதியான தருணத்தைக் காண்கிறார்கள்.
அத்துடன், "கடந்த இரண்டு வருடங்களாக நாங்கள் கண்ட அனைத்து வலிகள் மற்றும் விஷயங்கள் இருந்தபோதிலும், போர்நிறுத்தம் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று மற்றொரு பெண் கூறியுள்ளார்.
இதேவேளை, "எங்களுக்குள் இருந்த பயம் நீங்கிவிட்டது, இப்போது எங்கள் அன்புக்குரியவர்கள், எங்கள் குடும்பங்கள், அண்டை வீட்டார் மற்றும் இன்னும் உயிருடன் இருக்கும் நண்பர்களைக் காணலாம். சண்டை நின்றதிலிருந்து. நான் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்று, நான் என் சகோதரியைப் பார்க்கச் சென்றேன், இரண்டு வருடங்களாக நான் அவளைப் பார்க்கவில்லை. அவளைப் பார்த்ததால் என் இதயத்தில் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது." என்றும் காசா மக்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |