காசாவில் இஸ்ரேலிய படைகள் நிலைநிறுத்தப்படும்! நெதன்யாகு எச்சரிக்கை

Benjamin Netanyahu Israel Israel-Hamas War Gaza
By Faarika Faizal Oct 11, 2025 06:25 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கைவிடும் வரை காசாவில் இஸ்ரேலிய படைகள் நிலைநிறுத்தப்படும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தமானது இஸ்ரேலின் உள்ளூர் நேரப்படி பகல் 12 மணிக்கு நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கருத்து தெரிவித்த பெஞ்சமின் நெதன்யாகு, “ஹமாஸ் ஆயுதங்களை முழுமையாக ஒப்படைக்கும் வரை அதன் மீதான அழுத்தத்தை தொடர்ந்து இறுக பிடிப்பதற்காக காசா பிராந்தியத்தில் இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.

இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பலஸ்தீனியர்களின் உடல்கள்

இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பலஸ்தீனியர்களின் உடல்கள்

கைதிகள் விடுவிப்பு  

அமைதி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டது போல பின்வாங்கல் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்தாலும், ஹமாஸ் பலஸ்தீன அரசாங்கத்திடம் இருந்து முழுமையாக வெளியேரும் வரை இஸ்ரேலிய படைகள் வெளியேற போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

காசாவில் இஸ்ரேலிய படைகள் நிலைநிறுத்தப்படும்! நெதன்யாகு எச்சரிக்கை | Israel Hamas War

அத்தோடு, இது எளிய வழியில் அடையப்பட வேண்டும் அல்லது கடினமான வழியில் அடையப்படும் என்றும் ஹமாஸுக்கு நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பணயக் கைதிகள் விடுவிப்பு எதிர்வரும் நாட்களில் நடைபெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காசாவில் நிரந்தர அமைதி : ஹமாஸின் அறிவிப்பால் புதிய திருப்பம்

காசாவில் நிரந்தர அமைதி : ஹமாஸின் அறிவிப்பால் புதிய திருப்பம்

ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தை முறையாக அங்கீகரித்த இஸ்ரேல்

ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தை முறையாக அங்கீகரித்த இஸ்ரேல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW