ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தை முறையாக அங்கீகரித்த இஸ்ரேல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தை இஸ்ரேலின் அமைச்சரவை முறையாக அங்கீகரித்துள்ளது.
நேற்று(09.10.2025) இரவு கூடிய அமைச்சரவை இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.
இதனையடுத்து போர் நிறுத்தம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது உடனடியாக நடக்கும் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் தண்டனை அனுபவிக்கும்
இருப்பினும் பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர், அமைச்சரவை ஒப்புதல் அளித்த 24 மணி நேரத்திற்குள் இது தொடங்கும் என்று கூறியுள்ளார். அத்துடன் காசாவில் இருந்து, இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கும், அத்துடன் சுமார் 53வீத பகுதியை மாத்திரம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், 72 மணித்தியாலங்களுக்குள், உயிருடன் இருப்பதாக நம்பப்படும் 20 பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறந்த 28 பணயக்கைதிகளின் உடல்களும் வழங்கப்படும். இருப்பினும் அதற்கு எவ்வளவு காலம் ஆகலாம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பின்னர் இஸ்ரேல், தமது சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் சுமார் 250 பாலஸ்தீன கைதிகளையும், காசாவிலிருந்து 1,700 கைதிகளையும் விடுவிக்கும் என்று பாலஸ்தீன தரப்பு தெரிவித்துள்ளது.
ட்ரம்பின் திட்டத்தின்படி, ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதியின் எச்சங்களுக்கும் பதிலாக 15 காசா மக்களின் உடல்களையும் இஸ்ரேல் திருப்பி அனுப்பும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. இதேவேளை, மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் நூற்றுக்கணக்கான லொறிகளும் காசாவிற்குள் நுழையத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |