இஸ்ரேல் : காசா போர் நிறுத்தம் - அமைதி திட்டத்துக்கு ஒப்புதல்

Israel Israel-Hamas War Gaza
By Faarika Faizal Oct 09, 2025 09:26 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்புக்குமிடையிலான அமைதி திட்டத்தின் முதல் கட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

பணயக் கைதிகள் அனைவரும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள், மேலும் இஸ்ரேல் தங்கள் துருப்புக்களை ஒப்புக்கொண்ட எல்லை வரை திரும்பப் பெறும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

காசா அமைதி திட்டத்தில் மாற்றங்கள் தேவையில்லை..! ட்ரம்ப் திட்டவட்டம்

காசா அமைதி திட்டத்தில் மாற்றங்கள் தேவையில்லை..! ட்ரம்ப் திட்டவட்டம்

இஸ்ரேலுக்கு ஒரு சிறந்த நாள் 

இந்த ஒப்பந்தத்தை "இஸ்ரேலுக்கு ஒரு சிறந்த நாள்", இஸ்ரேலிய துருப்புக்கள், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் : காசா போர் நிறுத்தம் - அமைதி திட்டத்துக்கு ஒப்புதல் | Israel Hamas War

ஒப்பந்தத்தை அங்கீகரிக்கவும் பணயக்கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வரவும் நாளை இஸ்ரேல் அரசாங்கத்தை கூட்டுவேன் என்று நெதயன்யாகு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் இந்த ஒப்பந்தத்தை முழுமையாக பின்பற்ற இஸ்ரேலை கட்டாயப்படுத்துமாறு ட்ரம்ப் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

2 வருட இனப்படுகொலையில் காசாவில் 254 ஊடகவியலாளர்கள் தியாகிகள்

2 வருட இனப்படுகொலையில் காசாவில் 254 ஊடகவியலாளர்கள் தியாகிகள்

காசா மீதான தாக்குதல்

போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக செய்திகள் வெளியான போதிலும், இஸ்ரேலிய இராணுவம் காசா மீதான தாக்குதல்களைத் தொடர்வதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் : காசா போர் நிறுத்தம் - அமைதி திட்டத்துக்கு ஒப்புதல் | Israel Hamas War

காசா நகரின் மேற்குப் பகுதிகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வரவிருக்கும் நாட்களில் மத்திய கிழக்கிற்கு பயணம் செய்வது குறித்து டிரம்ப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ட்ரம்ப்க்கு அமைதிக்கான நோபல் பரிசு குறித்து வெளியான தகவல்

ட்ரம்ப்க்கு அமைதிக்கான நோபல் பரிசு குறித்து வெளியான தகவல்

காசா குறித்த ட்ரம்பின் அறிவிப்பு : இந்தியா - பாகிஸ்தானின் நிலைப்பாடு வெளியானது

காசா குறித்த ட்ரம்பின் அறிவிப்பு : இந்தியா - பாகிஸ்தானின் நிலைப்பாடு வெளியானது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW