போர்நிறுத்த ஒப்பந்த விதிமுறைகள் முன்னேறாது! இஸ்ரேல் தெரிவிப்பு
காசாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த அனைத்து கைதிகளையும் மீட்ட பிறகு, ஹமாஸ் முழுமையாக ஆயுதம் களைவதற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் போர்நிறுத்த ஒப்பந்த விதிமுறைகள் முன்னேறாது என்று இஸ்ரேல் தற்போது தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தங்களின் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்து பொதுவெளியில் அறிவித்துள்ளது.
இந்த வாரம் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஹமாஸ் அதிகாரிகள் இருவர், அமெரிக்காவோ அல்லது நடுநிலையாளர்களோ தங்களிடம் எந்தவொரு விரிவான அல்லது தெளிவான ஆயுதநீக்கம் தொடர்பான முன்மொழிவையும் முன்வைக்கவில்லை என்று கூறினர்.
ஆயுத நீக்கம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவையில் உறுப்பினராகவும், இஸ்ரேலின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவராகவும் உள்ள அவி டிக்டர், ஆயுத நீக்கம் தொடர்பான முரண்பாடுகள் காரணமாக இஸ்ரேல் மீண்டும் காசாவில் போரைத் தொடங்கக்கூடும் என்று எச்சரித்தார்.

நாம் காசாவில் போரை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் டிக்டர் தெரிவித்தார்.
அத்துடன், ஆயுதநீக்கம் பிரச்சினை இஸ்ரேல் படைகளால் கடினமான முறையில் தீர்க்கப்பட வேண்டியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
கடந்த வாரம் வைட் ஹவுஸ் பகிர்ந்த ஒரு ஆவணத்தின் படி, ட்ரம்ப் நிர்வாகம் கனரக ஆயுதங்களை உடனடியாக செயலிழக்கச் செய்ய வேண்டும் என்றும், காசாவில் இடைக்கால தொழில்நுட்ப நிர்வாகத்தின் கீழ் உள்ள காவல் துறை தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்யும் அளவிற்கு திறன் பெறும் வரை, தனிப்பட்ட ஆயுதங்கள் துறைய்தோறும் பதிவு செய்து செயலிழக்கச் செய்யப்பட வேண்டும் என்றும் விரும்புகிறது.