அம்பாறை மாவட்டத்தில் தொழில்னுட்ப பிரிவில் முதலாம் நிலையினை பெற்ற மாணவி

Ampara Sri Lankan Schools
By Raghav Jul 07, 2024 01:57 PM GMT
Raghav

Raghav

அண்மையில் வெளியான க.பொ.த (உ/த) பரீட்சை - 2023 (2024) பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தர தொழில்நுட்ப பிரிவில் அம்பாறை மாவட்ட ரீதியாக முதலாம் நிலையைப் பெற்ற கல்முனை கல்வி வலய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவி ஐ.எப். இஸ்ரா ஹஷ்பானி சாதித்துள்ளார்.

மேலும் இந்த பாடசாலையை சேர்ந்த மாணவியான எம்.எம்.எப். பத்தூனா மூன்றாம் நிலை பெற்றுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலையைப் பெற்ற கல்முனை கல்வி வலய பாடசாலை மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் அவர்களின் தலைமையில் வியாழக்கிழமை (04) மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது.

முதலாம் நிலை

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி. சுஜாதா குலேந்திரகுமார் கலந்து கொண்டார்.

அம்பாறை மாவட்டத்தில் தொழில்னுட்ப பிரிவில் முதலாம் நிலையினை பெற்ற மாணவி | Isra Hashbani Who Won First Position In Amparai

இதன்போது உயர்தர தொழில்நுட்ப பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் முதலாம் நிலையினை பெற்ற இஸ்ரா ஹஷ்பானி பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.

இந்த மாணவிகளை சிறந்த முறையில் வழிநடத்தி நெறிப்படுத்திய பகுதித் தலைவர், சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) தெரிவித்துள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்