ஈரானின் அதிரடி அறிவிப்பால் மத்திய கிழக்கில் பதற்றம்!
ஈான் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானிய உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரிகை விடுத்திருந்தார்.
மத்திய கிழக்கு நாடான ஈரானில் தொடர்ந்து இடம்பெற்று வரும் தீவிர போராட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்கா, ஈரானை எச்சரித்து வருகின்றது.
தாக்குதல்
இந்த நிலையில், ஈரான் முதலில் தாக்காது, ஆனால் போருக்குத் தயாராக உள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியும் அறிவித்துள்ளார்.

மேலும், அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இஸ்ரேலுடனான 12 நாள் மோதலின் போது இருந்ததை விட ஈரான் "இன்னும் தயாராக" இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஈரானில் நிலவி வரும் அமைதியின்மைக்கு மத்தியில் நடந்து வரும் கட்டுப்பாடுகள் பாதுகாக்கப்படுவதாகவும் "இனி எந்த அச்சுறுத்தல்களும் இல்லை என்பதை நாங்கள் உறுதி செய்யும் வரை" அந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, போராட்டத்தை கட்டுப்படுத்த ஈரான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அமெரிக்கா தலையிட்டால் போரை மேற்கொள்ள தயங்க மாட்டோம் என ஈரான் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.