ஈரான் அதிபர் ரைசி விபத்தில் உயிரிழப்பு...! இஸ்ரேல் வெளியிட்ட தகவல்

By Fathima May 21, 2024 05:01 AM GMT

ஈரான் (Iran) அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததற்கும் இஸ்ரேலுக்கும் (Israel) எந்தத் தொடர்பும் இல்லை என்று இஸ்ரேலின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் அதிபரின் மரணத்தில் இஸ்ரேலின் மொசாட் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலை வெறுப்பவர்கள்

குறிப்பாக இஸ்ரேலின் மொசாட் அமைப்புதான் இந்த விபத்திற்கு காரணம் என இஸ்ரேலை வெறுப்பவர்கள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பதிவு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Iran

அத்தோடு, சிலர் ஈரான் அதிபர் பயணித்த அந்த உலங்கு வானூர்தியை ஓட்டிச்சென்றவர் மொசாட் அமைப்பை சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்  இவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என அவர் தெரிவித்துள்ளார்.