நெதன்யாகுவால் எச்சரிக்கப்பட்ட ஈரான் : மீண்டும் தாக்குதல்

Benjamin Netanyahu Israel Iran World
By Fathima Apr 19, 2024 04:25 AM GMT
Fathima

Fathima

இஸ்ரேல் (Israel) தனித்து தனது முடிவுகளை எடுக்கும் என பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) எச்சரித்த ஒரு நாளிலேயே ஈரானில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஈரானின் கடந்த வார இறுதி வான்வழித் தாக்குதல்கள் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்திருந்தார். 

ஒரே நேர குண்டுவெடிப்பு

இந்நிலையில், ஈரான் - இஸ்பஹான் அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானிய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நெதன்யாகுவால் எச்சரிக்கப்பட்ட ஈரான் : மீண்டும் தாக்குதல் | Iran Israel War Netanyahu Warns

எனினும், இதற்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை என கூறப்படுகின்றது. 

அதேநேரம், ஈராக் மற்றும் தெற்கு சிரியாவிலும் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.