வீடு வாடகைக்கு வழங்கும் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Nihal Talduwa Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Mayuri Jun 29, 2024 02:27 AM GMT
Mayuri

Mayuri

வீடு வாடகைக்கு விடப்பட்டால் அந்த வீட்டை வாடகைக்கு எடுப்பவர்கள் என்ன வகையான வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதை கண்டறியும் பொறுப்பு உரிமையாளருக்கு உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியர்கள், நேபாளிகள் மற்றும் பாகிஸ்தானியர்கள் உட்பட பல்வேறு நாட்டவர்களின் சட்டவிரோத இணைய நிதி மோசடி, நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய பொருளாதாரத்தை பாதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

வீடு வாடகைக்கு வழங்கும் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Instructions To Landlords Who Rent Houses

பாதுகாப்பு அச்சுறுத்தல்

மேலும் தெரிவிக்கையில், இணையத்தில் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் கணினி குற்றங்கள் என்ற பிரிவின் கீழ் வருகிறது. அவை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆடம்பர வீடுகளில் தங்கியிருந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட 137 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா விசாவில் மேலும் பல இந்திய பிரஜைகள் நாட்டில் தங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட சூதாட்ட இணைய பக்கம் நாட்டில் இருந்து இயக்கப்பட்டு வருவதும், இந்திய நாட்டவர்களுடன் தொடர்பு கொண்டு கோடிக்கணக்கில் சூதாட்டம் விளையாடுவதும் தெரியவந்துள்ளது.

வீடு வாடகைக்கு வழங்கும் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Instructions To Landlords Who Rent Houses

இந்த இந்திய பிரஜைகள் பல மாதங்களாக இந்த மோசடியை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. மேலும், வீட்டை வாடகைக்கு எடுப்பவர்கள் என்ன வகையான வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டறியும் பொறுப்பு உரிமையாளருக்கு உள்ளது.

கைது செய்யப்பட்ட பலர் வீடுகளை வாடகை அடிப்படையில் எடுத்து தங்கியிருந்து மோசடிகளில் ஈடுபட்டுள்ளமையும், பல்வேறு குற்றத்திற்கு பயன்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW