உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Mayuri
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகளாக பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரிவித்து பல்வேறு பிரதேசங்களிலும் சுற்றித்திரிந்து பணம் சேகரித்த சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி நபர்களுக்கு பணம் செலுத்திய அல்லது அவர்களால் தங்களின் இருப்பிடம் பரிசோதனை செய்யப்பட்ட வரி செலுத்துபவர்களின் தகவல்கள் சட்ட நடவடிக்கைகளுக்காகத் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
எனவே அது தொடர்பாக உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால் கையெழுத்து இடப்பட்ட அவ்வறிவித்தலில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |