வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பல மில்லியன் டொலர்களை அனுப்பினர்
Dollar to Sri Lankan Rupee
United States of America
Economy of Sri Lanka
By Fathima
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பணியாற்றிவரும் இலங்கையர்கள் மூலம் மார்ச் மாதத்தில் 568 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
2023 ஜனவரி முதல் மார்ச் வரை வெளிநாடுகளில் பணியாற்றிவரும் இலங்கையர்கள் ஊடாக 1,413.2 மில்லியன் டொலர் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.