மதுபான விற்பனை அதிகரிப்பு

Sinhala and Tamil New Year Lankasri
By Fathima Apr 15, 2023 07:11 AM GMT

கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்திருந்த மதுபான விற்பனை புத்தாண்டு காலத்தில் அதிகரித்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மது விற்பனை சுமார் 40 சதவீதம் குறைந்துள்ளது.

மது விற்பனை அதிகரித்துள்ளது

ஆனால், இந்த ஆண்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக மதுபான உற்பத்தி நிறுவனங்கள் கலால் திணைக்களத்துக்குத் தெரிவித்துள்ளன.

ஏப்ரல் கடைசி வாரத்தில் இருந்து மது விற்பனை அதிகரித்துள்ளது.

மதுபானத்தின் விலையை குறைக்கும் வகையில் மதுபான வரியை 2000 ரூபாவால் குறைக்குமாறு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் நிதியமைச்சிற்கு அறிவித்திருந்த போதிலும் அந்த கோரிக்கையை நிதியமைச்சு நிராகரித்துள்ளது.