நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டின் மீது பாரவூர்தி மோதி விபத்து

By Fathima Mar 12, 2024 01:57 PM GMT

நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொடவின் வீட்டின் மீது கொள்கலன் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரின் பலாங்கொட மிரிஸ்ஸவத்த வீதியில் அமைந்துள்ள வீட்டின் மீது இவ்வாறு வாகனம் மோதுண்டுள்ளது. இந்த விபத்து காரணமாக வீட்டுக்கு பலத்த சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர் ஆபத்தோ காயங்களோ ஏற்படவில்லை

இந்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு உயிர் ஆபத்தோ காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம்பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

குறித்த வாகனம் மோதுண்ட வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.