இன ரீதியான கல்வி வலயங்கள் வேண்டாம்! இம்ரான் மஹ்ரூப் விசேட கோரிக்கை
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தம்பலகாமம் பிரதேச சபையில் இன்று (18.07.2025) இடம்பெற்ற கூட்டத்திலேயே குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இம்ரான் மஹ்ரூப் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
01. தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவிலுள்ள பாடசாலைகளில் இங்குள்ள முஸ்லிம் பாடசாலைகள் கிண்ணியா கல்வி வலயத்துடனும், தமிழ் பாடசாலைகள் திருகோணமலை கல்வி வலயத்துடனும், சிங்கள பாடசாலைகள் கந்தளாய் கல்வி வலயத்துடனும் இன ரீதியாக பிரித்து இணைக்கப்பட்டுள்ளன.
எனவே தம்பலகாம பிரதேசத்திற்கென தனியான கல்வி வலயம் உருவாக்கப்படுதல்.
02. தம்பலகாம வைத்தியசாலையில் பிண அறை ஒன்றினை அமைத்தல்.
03. சிராஜ் நகர் சேனைவெளி குளத்தினை அண்டிய பகுதியினை சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில் சிறுவர் பூங்காவுடன் கூடிய பொழுதுபோக்குத் தளம் ஒன்றினை அமைத்தல்.
04. சேதமடைந்துள்ள வீதிகளை செப்பனிடுதல்.


