வரி செலுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு
2023/2024 மதீப்பிட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரியைச் செலுத்தல் தொடர்பில் வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில், 2023/2024 மதீப்பிட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரியைச் செலுத்தல் மற்றும் தவறுகையில் உள்ள வரியைச் செலுத்தி முடித்தல் தொடர்பில் விளக்கமளித்துள்ளது.
அபராதம் மற்றும் வட்டி தள்ளுபடி
இதன்படி, 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கு வருமான வரியைச் செலுத்த வேண்டிய அனைத்து நபர்களும், அந்த மதிப்பீட்டாண்டுக்குரிய அனைத்து வரிமான வரியினையும் செப்டம்பர் 30 அன்று அல்லது அதற்கு முன்னதாகச் செலுத்தி முடித்தல் வேண்டும்.
அவ்வாறு செய்யாவிடின், வருமான வரி செலுத்தாதற்கு அல்லது தாமதமாக செலுத்துவதற்கு விதிக்கப்படும் அபராதம் மற்றும் வட்டி தள்ளுபடி செய்யப்படாது அல்லது குறைக்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.