எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்ட போதிலும், பெப்ரவரி மாதத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் எரிவாயுவை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உயர் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து இந்த முடிவுகள் எடுக்கப்படும் என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே பீரிஸ் (Niroshan J Peiris) தெரிவித்துள்ளார்.
இருபதாயிரம் மெட்ரிக் டன் லாஃப் எரிவாயு
இது தொடர்பில் அதன் தலைவர் தெரிவிக்கையில்,
உலகளாவிய எரிவாயு விலைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அவை வெளியிடப்பட்டவுடன், ஒரு நிறுவனமாக, உயர் நிர்வாகத்துடன் சேர்ந்து, நுகர்வோருக்கு மிகவும் மலிவு விலையை நாங்கள் உறுதி செய்வோம்.
ஜனவரி மாதத்தில் இருந்ததைப் போலவே உலக சந்தை விலைகள் இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம், ஆனால் கடந்த சில நாட்களில் இது மாறக்கூடும். எனவே, இந்த நேரத்தில் பெப்ரவரி எரிவாயு விலையை கணிப்பது கடினம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |