பரீட்சைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Sri Lanka Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination
By Fathima Jul 28, 2023 07:02 PM GMT
Fathima

Fathima

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப் சாதாரண தர அழகியல் பாட செயன்முறை பரீட்சைகள் ஒகஸ்ட் மாதம் 02ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலைத்தேய சங்கீத பாடத்தின் செவிமடுத்தல் பரீட்சை ஒகஸ்ட் மாதம் 06ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

பரீட்சைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு | Important Announcement Regarding Exams

இதன்படி, 1,355 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

பரீட்சைகள் தொடர்பில் மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருக்குமாயின் 1911 என்ற துரித இலக்கத்திற்கு அல்லது gceolexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலம் தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.