புதிய கொள்கையுடன் இலங்கையில் வாகன இறக்குமதி

Dinesh Gunawardena Nalin Fernando
By Mayuri Feb 21, 2024 10:26 AM GMT

புதிய கொள்கையின் கீழ் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வாகன இறக்குமதி தொடர்பில் ஆராயும் உப குழுவின் உறுப்பினரான அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உபகுழு கூடிய போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

வாகன இறக்குமதி

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்த உப குழுவில் வாகன இறக்குமதி தொடர்பான கொள்கையை முன்னெடுப்போம். கடந்த 15 – 20 வருடங்களாக எந்த கொள்கையும் இல்லாமல் வாகனங்களை இறக்குமதி செய்து வருகிறோம்.

அத்துடன் வாகனங்கள் போன்ற ஏராளமான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

எனவே, புதிய கொள்கையுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை வழங்குவோம் என நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.