பயறு மற்றும் சிவப்பு சீனி தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Apr 05, 2023 11:28 PM GMT

பயறு மற்றும் சிவப்பு சீனி ஆகியவற்றை இறக்குமதி செயற்வதற்கு அனுமதியை பெற்றுத்தருமாறு அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இறக்குமதி தடையை நீக்க கோரிக்கை

சிவப்பு சீனி மற்றும் பயறு ஆகியவற்றிற்கு சந்தையில் நிலவும் அதிக விலையை கருத்தில் கொண்டு இறக்குமதி தடையை நீக்கி நாட்டிற்கு இறக்குமதி செயற்வதற்கு அனுமதியளிக்குமாறு அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பயறு மற்றும் சிவப்பு சீனி தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை | Import Of Red Sugar And Pulses Allowed To Operate

குறித்த இரு அத்தியாவசிய பொருட்களுக்கும் சுங்க வரிவிதிப்பினை மேற்கொண்டேனும் இறக்குமதிக்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.