உலகிலேயே விலை உயர்ந்த வீட்டில் இஃப்தார் உணவு

Iftar
By Thahir Apr 02, 2023 01:34 PM GMT

ஃபாலஸ்தீனில் குப்பத்துஸ் ஸக்ரா என்று அழைக்கப்படும் பள்ளிவாசலுக்கு மிக மிக அருகாமையில் ஹாஜியா உம்மு முஹம்மத் அல்மதல் என்பவருடைய வீடு உள்ளது.

பைத்துல் முகத்தஸுக்கு அருகே இதைவிட நெருக்கமாக வேறு வீடுகள் எதுவும் கிடையது. ஜன்னலைத் திறந்தால் அடுத்த கட்டிடம் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசல்.

அந்த வீட்டை 200 மில்லியன் டாலருக்கு விலை பேசினார்கள். (ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம்) ஆனால் அந்த வீட்டின் உரிமையாளரான உம்மு முஹம்மத் என்ற பெண்மணி கூறிய பதில் என்ன தெரியுமா:

"உலகின் ஒட்டுமொத்த செல்வத்தையும் என் காலடியில் கொட்டினாலும் இந்த வீட்டை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன், விற்கவும் மாட்டேன்''. அந்த வீட்டில் இஃப்தாருக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருக்கும் உணவையும் ஜன்னலில் தெரியும் (குப்பத்துஸ் ஸக்ரா) பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலையும் இந்தப் புகைப்படத்தில் காணலாம். ஃபாலஸ்தீன் நமக்கு உணர்வு. அவர்களுக்கோ உயிர்.

உலகிலேயே விலை உயர்ந்த வீட்டில் இஃப்தார் உணவு | Iftar At The Most Expensive House In The World