புனித ஹஜ் யாத்திரைக்கு 18 இலட்சம் பேர் சவூதி விஜயம்

Festival Saudi Arabia World
By Fathima Jun 28, 2023 06:42 PM GMT
Fathima

Fathima

 இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சுமார் 18 இலட்சம் பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டுள்ளதாக சவூதி அரேபியா அரசாங்கம் அறிவித்துள்ளது.

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு மக்காவிற்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள்.

புனித ஹஜ் யாத்திரைக்கு 18 இலட்சம் பேர் சவூதி விஜயம் | Holy Hajj 18 Lakh People Travel Saudi Arabia 2023

அரசாங்கத்தின் ஏற்பாடு

இந்நிலையில் இந்த ஆண்டில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சவூதி அரேபியாவுக்கு புனித பயணம் மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை புனித பயணம் மேற்கொண்டுள்ள முஸ்லிம்களுக்கு தேவையான வசதிகளை அந்நாட்டு அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஹஜ் பயணிகளுக்கு சவுதி அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில், இந்தாண்டு அதிகளவிலான மக்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.