பேஜர்கள் வெடித்ததில் 8 ஹிஸ்புல்லா போராளிகள் பலி: 2750 போராளிகள் காயம்
ஈரான் (Iran) ஆதரவு பெற்ற லெபனானின் (Lebanon) ஆயிரம் இடங்களில் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் சிறிய பேஜர் கருவிகளைக் கொண்டு நடாத்தப்பட்ட தாக்குதலில் 08பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பேஜர் கருவி தாக்குதல் நேற்றையதினம் (17) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 08 பேர் உயிரிழந்ததுடன் 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நடவடிக்கை
இந்த சம்பவத்திற்கு இஸ்ரேலை (Israel) குற்றம் சாட்டவில்லை என்றாலும், இதனால் தனது உறுப்பினர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாக ஹிஸ்புல்லா ஒப்புக் கொண்டுள்ளது.
இஸ்ரேலுடன் நடைபெற்று வரும் போர் நடவடிக்கையில் பேஜர்கள் வெடித்ததால் ஏற்பட்டுள்ள இழப்பு ஹிஸ்புல்லா எதிர்கொண்ட மிகப்பெரிய பாதுகாப்பு மீறல் என ஹிஸ்புல்லா அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு அடையாளம் வெளியிடாமல் அளித்த நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டள்ளார்.
சைபர் தாக்குதலால் லித்தியம் பேட்டரிகள் அதிக வெப்பமடைந்ததால் பேஜர் வெடிப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் இதுகுறித்து ஹிஸ்புல்லாவில் உள்ள தொடர்புடைய அதிகாரிகள், விரிவான விசாரணை நடத்தி வருகிறது.
Se re pudrio en el Líbano
— ElBuni (@therealbuni) September 17, 2024
Israel hackeo los localizadores que usan los terroristas de hezbollah para comunicarse y los hizo explotar
Dicen que hay más de 1000 heridos pic.twitter.com/O6EHLHqwm4
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |