திருகோணமலையில் கனரக வாகனம் தடம்புரண்டு விபத்து
Trincomalee
Sri Lanka Police Investigation
Eastern Province
By Laksi
திருகோணமலையில் (Trincomalee) சீமெந்து கலவையை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று (6) திருகோணமலை- அக்போபுர பொலிஸ் பிரிவிலுள்ள 85 ஆம் கட்டைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது, வாகனத்தில் பயணித்த சாரதியும், உதவியாளரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |