இலட்சக்கணக்கில் ஏற்படபோகும் வேலையிழப்புக்கள்...! வெளியாக தகவல்

Sri Lanka Sri Lankan Peoples
By Shalini Balachandran Nov 02, 2026 11:49 AM GMT

2040 ஆம் ஆண்டளவில் இலங்கையில் சுமார் 1 இலட்சத்து 45 ஆயிரம் முழுநேர வேலைவாய்ப்புகள் இழக்கப்படக்கூடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தெரிவித்துள்ளது.

உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பின் தாக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடும் எனவும் இதனால் ஆண்டுதோறும் சுமார் 26 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இழப்பு ஏற்படக்கூடும் என்றும்அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மேற்கொண்டுள்ள அண்மைய ஆய்வில், அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் தொழிலாளர் உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் ஏற்கனவே பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை 

குறிப்பாக, அதிக வெப்பநிலை காரணமாகத் தொழிலாளர்கள் அடிக்கடி ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்படுதல், வேலை செய்யும் வேகம் குறைவடைதல் மற்றும் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகள் தோன்றுதல் ஆகியவை தொழிலாளர் உற்பத்தித்திறன் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதன் தாக்கம் எதிர்வரும் தசாப்தங்களில் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளில் மேலும் தீவிரமடையக்கூடும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலட்சக்கணக்கில் ஏற்படபோகும் வேலையிழப்புக்கள்...! வெளியாக தகவல் | Heat Stress Threatens 120K Jobs In Lanka

இந்தநிலையில், இந்தப் பாதிப்புகளைக் குறைப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

அதன்படி, அதிக வெப்பம் நிலவும் நேரங்களைத் தவிர்க்கும் வகையில் வேலை நேரங்களை மாற்றியமைத்தல், பணியின்போது ஓய்வெடுப்பதற்கான முறையான கால அட்டவணைகளை அறிமுகப்படுத்துதல், பணியிடங்களில் நிழல் வசதிகளையும் போதிய குடிநீரையும் ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.