HPV தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு கூறியுள்ள விடயம்

Ministry of Health Sri Lanka
By Mayuri Oct 19, 2024 05:57 AM GMT
Mayuri

Mayuri

கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுப்பதற்காக வழங்கப்படும் HPV தடுப்பூசிக்குப் பின் ஏற்படும் சிறு பக்க விளைவுகள் குறுகிய காலத்துக்குரியவை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவிகள் அது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பான சுகாதார அமைச்சின் அறிவிப்பில்,

களுத்துறையில் உள்ள ஆரம்பப் பாடசாலையொன்றின் 5 மாணவிகளுக்குக் குறித்த தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் வயிற்று வலி, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

HPV தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு கூறியுள்ள விடயம் | Health Ministry Of Sri Lanka

குறுகிய கால அறிகுறிகள்

அவை குறுகிய கால அறிகுறிகள். குறித்த மாணவர்களுக்கு உடனடி மருத்துவச் சிகிச்சை வழங்கியதன் பின், அவர்கள் குணமடைந்தனர்.

தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளும் போது ஏற்படும் அச்சம் காரணமாகச் சிறுவர்களுக்கு சிறு மயக்க நிலை போன்ற குறுகிய காலப் பக்க விளைவுகள் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW