மருந்து விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பில் வெளியான தகவல்

Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Doctors
By Aadhithya Jul 17, 2024 07:20 AM GMT
Aadhithya

Aadhithya

சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவினால் கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகளுக்காக விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

நிலுவைத் தொகை

அந்தவகையில், விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 800 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாகத் அவர் கூறியுள்ளார்.

மருந்து விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பில் வெளியான தகவல் | Health Ministry Faces 800M Drug Debt

மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தின் பிரகாரம், மருத்துவ வழங்கல் பிரிவிடமிருந்து தாம் பெற்றுக் கொண்ட தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW