விமலின் சத்தியாக்கிரக போராட்டம் நிறைவு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கல்வி அமைச்சுக்கு முன்னால் முன்னெடுத்திருந்த தனது சத்தியாக்கிரகப் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார்.
தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து போராட்டம் நிறைவுபெற்றுள்ளது.
கோரிக்கை
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினர் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது.

கல்வி அமைச்சிற்கு முன்பாக இந்தப் போராட்டம் நேற்றையதினம்(12) காலை ஆரம்பமாகியது. தற்போது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி, கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் என்று இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



