ஜனாஸா எரிப்புக்குக் காரணமானவர்களை தண்டிக்க ஹக்கீம் தனிநபர் பிரேரணை

Parliament of Sri Lanka Rauf Hakeem Sri Lanka
By Laksi Jan 02, 2025 06:37 AM GMT
Laksi

Laksi

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாகத் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்.

அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு பொருத்தமான விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைக்கு விவாதத்திற்கு திகதி குறிப்பிடப்படாத அந்தப் பிரேரணை (பா.28/2024) நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

63 அத்தியாவசிய பொருட்களின் பண்ட வரி தொடர்பில் வெளியான அறிவித்தல்

63 அத்தியாவசிய பொருட்களின் பண்ட வரி தொடர்பில் வெளியான அறிவித்தல்

தனிநபர் பிரேரணை

பிரஸ்தாப தனிநபர் பிரேரணையில் ரவூப் ஹக்கீம் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கான இயலுமை உள்ளதென உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.

ஜனாஸா எரிப்புக்குக் காரணமானவர்களை தண்டிக்க ஹக்கீம் தனிநபர் பிரேரணை | Hakeem Should Punish Responsible Janazah Burning

இந்தநிலையில், மேற்படி சடலங்ளை நல்லடக்கம் செய்வதால் நிலக்கீழ் நீரில் வைரஸ் கலப்பதற்கான அபாய நிலை உள்ளதாகக் கூறி கடந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட கொள்கையளவிலான தீர்மானத்தின்படி செயற்பட்டமையும், அந்த சடலங்களை உறவினர்களின் உடன்பாடின்றி தகனம் செய்தமையும் , பின்னர் அவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் செயற்பட்டமை சரியானதல்ல.

இன்று ஆரம்பமாகும் மூன்றாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள்

இன்று ஆரம்பமாகும் மூன்றாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள்

தெரிவுக்குழு

தவறு என்று தெரிவித்து அரசாங்கமே உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரியிருந்தமையும் இந்த தொற்றினால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தமது சமய ரீதியான இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்கோ அல்லது குறித்த சடலங்களை பார்வையிடுவதற்கோ சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

ஜனாஸா எரிப்புக்குக் காரணமானவர்களை தண்டிக்க ஹக்கீம் தனிநபர் பிரேரணை | Hakeem Should Punish Responsible Janazah Burning

இது குறித்து உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் எழுந்த எதிர்ப்புகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தகனம் செய்வதற்குப் பதிலாக ஓட்டமாவடியில் , மஜ்மா நகர் எனப்படும் தனிமையான பிரதேசத்தில் மேற்படி சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட போதிலும், குடும்ப உறவினர்கள் இறுதி கடமைகளைச் செய்வதற்கோ, மரியாதை செலுத்துவதற்கோ, உரிமை மறுக்கப்பட்டமை தொடர்பிலும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் பாரதூரமான தவறுகளை புரிந்துள்ளமையினாலும் குறிப்பிட்ட விடயங்களை உரிய முறையில் விசாரணை செய்து பொருத்தமான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கும்படியாக அந்தப் பிரேரணையில்(பா 28/2024) குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க புதிய வேலைத்திட்டம்

நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க புதிய வேலைத்திட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW