தொழுகை பற்றிய ஹதீஸ்கள்

Islam
By Fathima Oct 09, 2025 11:07 AM GMT
Fathima

Fathima

* பெருமானார் (ஸல்) அவர்கள் நவிலுகிறார்கள், அல்லாஹ் தஆலா எனது உம்மத்தினரின் மீது எல்லாவற்றிற்கும் முதன்மையாக தொழுகையையே கடமையாக்கினான். கியாமத்து நாளன்று எல்லாவற்றிற்கும் முதன்மையாக தொழுகையைப் பற்றியே விசாரிக்கப்படும்.

* தொழுகை விஷயத்தில் அல்லாஹ்வை கொண்டு அஞ்சிக்கொள்ளுங்கள். தொழுகை விஷயத்தில் அல்லாஹ்வை கொண்டு அஞ்சிக்கொள்ளுங்கள். தொழுகை விஷயத்தில் அல்லாஹ்வை கொண்டு அஞ்சிக்கொள்ளுங்கள்.

* மனிதனுக்கும் ஷிர்குக்கும் இடையில் தொழுகையே தடுப்பாக திரையாக உள்ளது.

* இஸ்லாத்தின் அடையாளம் தொழுகையாகும். எவரொருவர் மனதை ஓர்மைப்படுத்தி, அதன் நேரத்தையும், அதன் முஸ்தஹப்புகளையும் சுவனத்தில் வைத்து தொழுவாரோ அவரே முஃமீன் ஆவார்.

தொழுகை பற்றிய ஹதீஸ்கள் | Hadees About Namaz

* ஈமான், தொழுகை ஆகியவற்றை காட்டிலும் சிறந்ததொன்றை கடமையாக விதிக்கவில்லை.

* தொழுகை தீனின் தூண் ஆகும்.

* தொழுகை ஷைத்தானின் முகத்தை கரித்து விடுகின்றது.

* தொழுகையானது முஃமீனுக்கு பிரகாசமாக இருக்கிறது.

* தொழுகை மிக மேலான ஜிஹாதாகும்.

பத்து உபதேசங்கள்

பத்து உபதேசங்கள்


* மனிதன் தொழுகையில் ஈடுபட்டவுடன் அல்லாஹ் த ஆலா அவன் பக்கம் முழுமையாக கவனம் செலுத்துகின்றான். எப்பொழுது அவன் தொழுகையிலிருந்து வெளிப்பட்டு விடுகின்றானோ அப்பொழுது அவனும் தனது கவனத்தை அகற்றிக் கொள்கின்றான்.

* வானிலிருந்து ஏதேனும் ஆபத்து இறங்குமேயானால் அது மஸ்ஜிதை செழிப்பாக்குபவர்களின் பொருட்டால் அகற்றப்பட்டு விடுகின்றது.

* ஒருவன் ஏதேனும் பாவத்தின் காரணத்தால் நரகில் சென்றாலும் நரக நெருப்பு அவன் சஜ்தா செய்த உறுப்புகளை தீண்டுவதில்லை.

நபிவழி மருத்துவம் பூண்டு

நபிவழி மருத்துவம் பூண்டு


* சஜ்தாவின் போது பூமியில் பதியும் அங்கங்களை நரக நெருப்பு தீண்டுவதை அல்லாஹ் ஹராமாக்கி விட்டான்.

* குறித்த நேரத்தில் தொழப்படும் தொழுகையை எல்லாவற்றை விட அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமான அமல்

* மனிதனின் சகல நிலைகளிலும் அவன் நெற்றியை தரையில் தேய்த்த வண்ணம் சஜ்தாவில் விழுந்து கிடப்பதை பார்ப்பதே அல்லாஹ்வுக்கு எல்லாவற்றை விட அதிகப் பிரியமானது.

* அல்லாஹ்வுடன் அடியானுக்கு மற்ற எல்லாவற்றை விட மிக அதிக நெருக்கம் சஜ்தாவில் வாய்க்கின்றது.

தொழுகை பற்றிய ஹதீஸ்கள் | Hadees About Namaz

* சுவர்க்கத்தின் சாவிகள் தொழுகையாகும்.

* மனிதன் தொழுகைக்காக நிற்கும் போது சுவர்க்க வாசல்கள் திறந்து கொள்கின்றன. இருமல் போன்றவைகளில் ஈடுபடாத வரை அல்லாஹ்வுக்கும் அந்த தொழுகையாளிக்கும் இடையில் இருக்கும் திரைகள் விலகிக் கொள்கின்றன.

* தொழுகையாளி மாமன்னனின் தலைவாயிலைத் தட்டக்கூடியவன், தட்டினால் கதவு திறக்கப்படுவது எங்குமுள்ள நியதி.

* தீனில் தொழுகையின் அந்தஸ்து உடலில் சிரசின் அந்தஸ்தைப் போன்றது.