உலக சுற்றாடல் தினம்! கலாவெவவில் மரங்கள் நடும் நிகழ்வு
By Dhilak
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கலாவெவ ஐக்கிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட Green Kalawewa Project மரங்கள் நடும் நிகழ்வொன்று நேற்று(05) நடைபெற்றுள்ளது.
இதன்போது, கலாவெவ பள்ளிவாசால் ஓரங்களில் மற்றும் கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் ஓரங்களிலும் சுமார் அறுபதிற்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










