பொத்துவில் பேரெழுச்சிப் பெருவிழா
பொத்துவில் (Pottuvil) நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.வாசித் மற்றும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப்பை வாழ்த்தி பேரெழுச்சிப் பெருவிழா நேற்று (08) பொத்துவிலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கட்சியின் தேசிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர், பிரதித் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், நகர சபை மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், நலன்விரும்பிகள் என பலரும் பங்கேற்றனர்.
வாழ்த்து விழா
பெருந்திரளான பொதுமக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்ட இந்த விழா, மகிழ்ச்சி மற்றும் அரசியல் உற்சாகம் நிறைந்த ஒன்றாக இருந்து, பொத்துவில் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாகப் பதியப்போவதாக குறிப்பிடப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










