கிழக்கில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் ! வெளியான பட்டியல்
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 252 பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நியமனம் வழங்கும் நிகழ்வானது, இன்று(30) திருகோணமலை - உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டு அதிலிருந்து 1000 பேர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நேர்முகப் பரீட்சையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 252 பேருக்கே ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பட்டதாரிகள் நியமனம்
மேலும், இதில் அம்பாறை மாவட்டத்திலிருந்து சிங்கள மொழிமூலம் 34 பேரும், தமிழ் மொழிமூலம் 61பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலம் 94 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மொழிமூலம் 19 பேரும், தமிழ் மொழிமூலம் 42 பேருக்குமாக மொத்தம் 252 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன், இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்ன சேகர, வெளிவிகார வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ,கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |