தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : கருத்தரங்குகள், தனியார் வகுப்புகளுக்கு தடை

Department of Examinations Sri Lanka Grade 05 Scholarship examination
By Raghav Aug 01, 2025 12:39 PM GMT
Raghav

Raghav

எதிர்வரும் ஒகஸ்ட் 06 ஆம் திகதி நள்ளிரவு முதல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், வினாத்தாள் விநியோகம், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் பட்டறைகள் நடாத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக மேற்படி தீர்மாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை முடியும் வரை பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், வினாத்தாள் விநியோகம், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் பட்டறைகள் தடைசெய்யப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 2,787 தேர்வு மையங்களில் பரீட்சையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.