சகல வழிபாட்டுத் தலங்களையும் துப்பரவு செய்ய நிதி உதவி வழங்கிய அரசாங்கம்!

Sri Lanka Politician Weather Nalinda Jayatissa Cyclone Ditwah
By Fathima Dec 11, 2025 02:14 PM GMT
Fathima

Fathima

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் நிதி உதவி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போது அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த தகவலை வெளியிட்டார்.

சமய நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,"பேரிடருக்கு உள்ளான அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் துப்பரவு செய்து, சமய நடவடிக்கைகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.

சகல வழிபாட்டுத் தலங்களையும் துப்பரவு செய்ய நிதி உதவி வழங்கிய அரசாங்கம்! | Govt Financial Assistance To Places Of Worship

இந்த நடவடிக்கைக்கு உதவி வழங்குதல் பொருத்தமானது என அரசு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, வழிபாட்டுத் தலங்களைத் துப்பரவு செய்து இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.

அதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்வதற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி இதற்குரிய அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளார்."என தெரிவித்துள்ளார்.