உள்ளூர் முட்டை வியாபாரிகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

India Nalin Fernando Egg
By Sivaa Mayuri Apr 12, 2024 01:16 AM GMT

உள்ளூர் முட்டை விலை மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில் அரசாங்கம் மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் என வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ(nalin fernando) தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உள்ளூர் சந்தையில் முட்டை விலை சிறிதளவு விலை குறைவடைந்திருந்தது.

முட்டை ஒன்றின் விலை

எனினும் தற்போது உள்ளுர் சந்தையில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முட்டை வியாபாரிகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு | Government Warning To Local Egg Traders

மேலும், முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளமையே உள்ளூர் சந்தையில் விலை அதிகரிப்புக்குக் காரணம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.