அரச பேருந்துகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கான இலக்கம் அறிவிப்பு

Bandula Gunawardane Sri Lankan Peoples Sri Lanka Government
By Chandramathi Feb 28, 2024 03:36 AM GMT
Chandramathi

Chandramathi

அரச பேருந்துகளில் பயணிகளுக்கோ அல்லது யாருக்கோ அநீதி இழைக்கப்பட்டால் முறைப்பாடு செய்வதற்கு இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி 1958 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்யுமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஒழுக்கமற்ற செயற்பாடு

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (27) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச பேருந்துகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கான இலக்கம் அறிவிப்பு | Government Buses Complaint Number 1958

மேலும் கூறுகையில், இவ்வாறான ஒழுக்கமற்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு ஒழுக்காற்று தண்டனை வழங்கப்படுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

மற்ற ஓட்டுநர்களுடன் ஒப்பிடும்போது அரச பேருந்து ஓட்டுநர்கள் அதிக ஒழுக்கம், நட்பு மற்றும் பாதுகாப்பான நபர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.