இலங்கையில் தங்க விலையில் தொடர் வீழ்ச்சி

Gold Price in Sri Lanka Golf Today Gold Price
By Laksi Jul 22, 2024 07:37 AM GMT

நாட்டில்  கடந்த சில தினங்களாக உயர்வடைந்த தங்கத்தின் விலையானது தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றது.

அதன்படி, இன்று (22) ஒரு அவுன்ஸ்  தங்கத்தின் விலையானது 732,178 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய தங்க நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,830 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 206,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்க விலையில் தொடர் வீழ்ச்சி | Gold Price Today In Sri Lanka

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,680 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 189,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,610 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 180,850 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW