இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Fathima Jan 08, 2026 09:56 AM GMT

இலங்கையில் தங்க விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (08.01.2026) 3000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தங்கத்தின் விலை

2025 வருட இறுதிப்பகுதி முதல் இலங்கையில் தங்கத்தின் விலையில் தொடர் அதிகரிப்பு பதிவாகியிருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான வீழ்ச்சி பதிவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்! | Gold Price Sri Lanka

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 359000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 329,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,188 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.