தங்க நகை வாங்கப் போகிறீர்களா.. விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Benat
இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வேகமாக சரிந்து வருகின்றது.
அதற்கமைய, கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தங்கத்தின் விலை மூன்று இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக குறைந்துள்ளது.
இன்றைய நிலவரம்
அக்டோபர் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தங்கத்தின் விலை ரூ. 81,000 ரூபாவினால் குறைந்துள்ளது.

அதன்படி, இன்று (29) 8 கிராம் 22 கரட் தங்கத்தின் விலை ரூ. 296,000 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதற்கமைய, 8 கிராம் 24 கரட் தங்கத்தின் விலை ரூ. 320,000 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.