கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க நகை கடை!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் இடம் அல்லது நடமாடும் வலயத்தில் தங்க நகைக்கடை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம்
தற்போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இவ்வசதிகள் இன்மையால், அதன் புறப்படும் இடம்/நடமாடும் வலயத்தில் தங்க நகை கடையை அமைப்பதற்கு வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனி திட்டமிட்டுள்ளது.
குறித்த வலயத்தில் தங்க நகை கடையை அமைப்பதற்காக பொருத்தமான இயக்குநர் ஒருவரை தெரிவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறி முறைமையைக் கடைப்பிடித்து விலைமனு கோரலை மேற்கொள்வதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.