பிணையில் விடுதலையான ஞானசார தேரர்..!
Sri Lanka
Galagoda Aththe Gnanasara Thero
Bodu Bala Sena
Law and Order
By Laksi
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சிறையிலிருந்து வெளியேறியுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இன்று (22) காலை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வெளிநாட்டு பயணத் தடை
குரகல பிரதேசத்தில் இஸ்லாம் மதத்தை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, தேரரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 500,000 ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்,மேன்முறையீட்டு நீதிமன்றினால் ஞானசார தேரருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |