காசாவுக்கு சென்று கொண்டிருந்த கப்பல்களை தடுத்து நிறுத்திய இஸ்ரேல்
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காகச் சென்று கொண்டிருந்த Global Sumud கப்பல்களை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கப்பல்கள் போர்க் களத்துக்குள் நுழைவதால் அவற்றின் பாதையை மாற்றும்படி இஸ்ரேலிய இராணுவம் முன்னதாகவே எச்சரித்திருந்தது.
Global Sumud எனும் அணியில் 40க்கும் மேற்பட்ட கப்பல்களில் சுமார் 500 தொண்டூழியர்கள் காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காகச் சென்று கொண்டிருந்த போதே இஸ்ரேலிய இராணுவம் கப்பல்களை தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலை கண்டித்த துருக்கி
அனைத்துலக நீர்ப்பரப்பில் செல்லும் கப்பல்களை தடுத்து நிறுத்த இஸ்ரேலுக்கு உரிமை இல்லை என்று தொண்டூழியர்கள் கூறுயுள்ளனர்.
இந்நிலையில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காகச் சென்ற கப்பல்களை தடுத்து நிறுத்தியது பயங்கரவாதச் செயல் என்று துருக்கி அரசு இஸ்ரேலை கண்டித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |