பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமி மீட்பு
புத்தல பகுதியில், 14 வயதான சிறுமியொருவரை புத்தல பகுதியில் கடத்திச் செல்லப்பட்டு நிலக்கீழ் பாதாள அறையொன்றில் மறைத்து வைத்திருந்த நிலையில், அந்த சிறுமியை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த சிறுமியை 12 ஆம் திகதி புதன்கிழமை மதியம் மீட்டதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். குறித்த சிறுமி புத்தல – கட்டுகஹகல்கே பகுதியிலுள்ள வீடொன்றிற்கு கடந்த 9ம் திகதி வருகைத் தந்த மூன்று இளைஞர்கள், சிறுமியின் தந்தை மீது தாக்குதல் நடாத்தி, சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.
சிறுமியை காதலிப்பதாக கூறும் 20 வயதான இளைஞனினாலேயே இந்த சிறுமி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
பொலிஸ் முறைப்பாடு
இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் நடாத்திய விசாரணைகளில், பிரதான சந்தேகநபருடன் வருகைத்தந்த மேலும் இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, பொலிஸார் சந்தேகநபர்களிடம் நடாத்திய விசாரணைகளில், சிறுமி மறைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் இடம் தொடர்பான தகவல்களை அறிய முடிந்துள்ளது.