ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ வியூகத்தை கடுமையாக கேலி செய்த ஈரானிய அதிகாரி
ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர், முகமது பாகர் காலிபாப், ஈரானுக்கு எதிராக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இராணுவ சூழ்ச்சிகளைச் சமூக வலைதளங்களில் கேலி செய்துள்ளார்.
X சமூக வலைதளத்தில் இது தொடர்பில் அவர் ஒரு சுருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அறிவித்த இராணுவ நடவடிக்கைகளின் பெயர்களை “Operation Trust Me Bro” மற்றும் “Operation Fauxios” (ஒபரேஷன் போலி) என மாற்றி அமைத்து நையாண்டி செய்துள்ளார்.
அத்துடன், "ஒபரேஷன் ட்ரஸ்ட் மீ ப்ரோ தோல்வியடைந்தது," என்று பதிவிட்ட காலிபாப், அதனுடன், "இப்போது மீண்டும் பழைய நிலைக்கே (Operation Fauxios-உடன்) திரும்புவோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க - இஸ்ரேலுடனான போர் பதற்றம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், குறித்த பதிவு சர்வதேச பரப்பில் பேசுபொருளாகியுள்ளது.