சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

A D Susil Premajayantha Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination
By Shalini Balachandran Jul 23, 2024 09:53 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

கடந்த மே மாதம் நடந்தது முடிந்த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிட பரீட்சை திணைக்களம் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த ஹோமாகமவில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இதனை தெரிவித்துள்ளார்.

அதன் போது, விடைத்தாள் மதிப்பீட்டாளர்களின் அனைத்து கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் நியமனங்கள்

இதேவேளை, பாடசாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினை தொடர்பில் நேற்று (22) இணக்கப்பாடு எட்டப்பட்டதால், அது தொடர்பான வர்த்தமானியை நீதிமன்றத்தில் சமர்பிக்க முடியும் எனவும், வழக்கு விசாரணை முடிந்த பின்னர் அடுத்த வாரத்தில் அந்த நியமனங்களை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல் | Gce O L 2023 Results Release Date

மேலும், தற்போது 6000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் 23 பேர் வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதால் மீதியுள்ளவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தி நியமனம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் மிகக் குறுகிய காலத்தில் நிரப்பப்படும் என குறிப்பிட்டுள்ளார்.  

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW