பொதுப்போக்குவரத்து சேவை தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்
Ranil Wickremesinghe
Sri Lanka Government Gazette
Sri Lanka Government
By Rukshy
பொதுப் போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி செயலாளரினால் மேற்படி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பயணிகள் அல்லது பொருட்கள் அல்லது பொதுப் போக்குவரத்து சேவைகளின் போக்குவரத்துக்கான வீதிகள், பாலங்கள், கல்வெட்டுகள் மற்றும் புகையிரதங்கள் ஆகியவற்றின் மூலம் போக்குவரத்து சேவைகளை எளிதாக்குவதும் பராமரிப்பதும் அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |