இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான கயந்த கருணாதிலக்க எம்.பி

Gayantha Karunatileka Bribery Commission Sri Lanka Crime
By Fathima Dec 11, 2025 08:01 AM GMT
Fathima

Fathima

நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) வாக்குமூலம் அளித்துள்ளார்.

வாக்குமூலம் 

அதற்கமைய இன்று காலை 9 மணியளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகி சுமார் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான கயந்த கருணாதிலக்க எம்.பி | Gayantha Karunathilleka Visit Bribery Commission

முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் விவசாய அமைச்சை நடத்துவதற்காக இராஜகிரிய பகுதியில் ஒரு கட்டடத்தை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமையவே கயந்த கருணாதிலக்க இன்று (11.12.2025) காலை இவ்வாறு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான காலத்தில் அவர் முன்னாள் அமைச்சரவை அமைச்சராகவும் முன்னாள் வெகுசன ஊடகத்துறை அமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார்.